×

எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு- கையாளும் விதம் சரியில்லை என ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் குட்டு

 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. மேலுமணி மீது தொடரப்பட்டுள்ள டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவிப்பு  வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் கையாளும் விதம் சரியானதாக இல்லை என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு  தடைவிதிக்க முடியாது. லஞ்சஒழிப்புத் துறை விசாரணை அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்  உததரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. வழக்கில்  எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஒன்றிய அரசின் கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி வந்தார். முன்னாள்  அமைச்சர் ஒருவர்  மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ஒன்றிய அரசின் வழக்கறிஞர் ஆஜராக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு தடைவிதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த  வழக்கில் இடைக்கால உத்தரவுக்காக இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.  

இதனை எதிர்த்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மறுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஞ்சித்குமார் மத்திய அரசின் வழக்கறிஞரே குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சருக்காக ஆஜராகிறார், தனி நீதிபதி விவாரிக்கும் வழக்கை தானே விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு கூறுவது சரியானதாக இல்லை எனவே அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்க வைத்தார். இதற்கு எஸ்.பி வேலுமணி தாப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு மற்றும் சொத்துகுவிப்பு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் கையாளும் விதம் சரி இல்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் நாகாத்தினா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இதுபோன்ற ஒரு உத்தரவ எவ்வாறு போட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு என்ன உத்தரவு பிறப்பிக்கபோகிறது என்று பார்த்து விட்டு பின்னர் முடிவு செய்யலாம் என்று கூறி வழக்கை 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள். அதே வேளையில் இந்த விவகாரத்தில் சென்னை  உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு என்பது, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறயீட்டு மனு மீதான உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பிற்கு கட்டுபட்டது என்பதும நீதிபதிகளின் கருத்தாகும்.