×

சி.பா. ஆதித்தனார் பிறந்த நாள் - ஈபிஎஸ், ஓபிஎஸ் ட்வீட் 

 

சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளான இன்று  அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மொழி, தமிழினம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக தன் இறுதி மூச்சு வரை பாடுபட்ட திரு. சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘தினத்தந்தி’ நாளிதழ் மூலம் பாமரனையும் படிக்கத் தூண்டிய அவரது சேவை மகத்தானது.என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.