×

"யாரோ பிழைக்க நம்மை குடி நோயாளிகளாக்கி விட்டார்கள்" - செளமியா அன்புமணி

 

தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்தால் தங்களுடைய அதிகாரம் குறைந்து விடுமோ என சில பேர் தடுக்கிறார்கள் என சௌமியா அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பசுமைத்தாயகம்ய் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல மாவட்டத்தில் உள்ள பெண்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் இன்று திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சௌமியா அன்புமணி, “தமிழ்நாட்டிலேயே பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம்.  இரண்டாவது மிகப்பெரிய மாவட்டமான திருவண்ணாமலை  மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் ஆனால் இதை ஒருவர் பிரிக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறார் இந்த மாவட்டத்தை இரண்டாக பிரித்தால் தன்னுடைய அதிகாரம் குறைந்துவிடும் என நினைக்கிறார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 206 டாஸ்மாக் இதன் மூலமாக இந்த மாவட்ட மக்கள் குடிக்கு அடிமையாகி வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மட்டும் டாஸ்மாக் மது கடைகள் மூலமாக ஒரு ஆண்டுக்கு 3250 கோடி பணம் வசூலிக்கப்படுகிறது. டாஸ்மாக்கை மூடினால், இந்த பணமெல்லாம் நம்மோட வீடுகளில் சேமிப்பாக இருக்கும். யாரோ ஒருவர் பிழைக்க நம்மை பலி ஆக்குகிறார்கள். நம்மை குடி நோயாளிகளாக்கி விட்டார்கள்.திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்ல பெரிய கல்லூரிகள் எதுவும் இல்லை. மிகச் சிறந்த மாவட்டத்திற்கு உரிய எந்த வளர்ச்சி திட்டங்களும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொண்டுவரப்படவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே பெரிய சிப்காட் இருக்கிறது இந்த நிலையில் இங்குள்ள பல ஏக்கர் விலை நிலங்களை அழித்து அங்கு சிப்காட் கொண்டுவர திமுக அரசு நினைக்கிறது. திமுக அரசாங்கம் ஒருபுறம் மக்களுக்கு பணம் கொடுப்பது போல கொடுக்கிறார்கள் மறுபிறம் மின்சார கட்டணம் பேருந்து கட்டணம் குடிநீர் கட்டணம் சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை உயர்த்திவிட்டார்கள் கணக்கீடு செய்து பார்த்தால் நம்மிடமிருந்து பல வகைகளில் வரிகளை உயர்த்தி விட்டனர். அரசாங்கம் கொடுத்த காசை விட நம்மிடமாக இருந்து வரிகளை உயர்த்தி பெற்ற வருவாய் தான் அதிகம். திமுக அரசாங்கம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. ஒரு ஆண்டுக்கு பத்து நாட்கள் கூட வேலை கொடுப்பது இல்லை. நாளொன்றுக்கு 350 ரூபாய் வரை கொடுக்க வேண்டும் ஆனால் இவர்கள் கொடுப்பது 40, 50 ரூபாய் என கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.