×

"டாஸ்மாக் போல் ரேஷன் கடைக்கும் ஆன்லைன் வசதி"- செளமியா அன்புமணி

 

தமிழ்நாட்டின் நீரை உறிஞ்சி, மண்ணின் வளத்தை பாழாக்கியதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என பாமக எம்.எல்.ஏ செளமியா அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி, “தமிழ்நாட்டின் நீரை உறிஞ்சி, மண்ணின் வளத்தை பா்ாக்கியதோடு மட்டுமில்லாமல், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் NLC, நிலம் வழங்கிய விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில்லை. மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்றால் அது NLC நிறுவனம்தான். விளைநிலங்களை அழித்து, தண்ணீரையும் உறிஞ்சி எடுத்துவிட்டார்கள். நிறுவனத்துக்காக நிலம் கொடுத்த மண்ணின் மைந்தவர்களுக்கு நியாயமாக வேலை கொடுக்க வேண்டும். ஆனால் நுழைவுத்தேர்வு நடத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள். நுழைவுத்தேர்வு நடத்த இது என்ன மருத்துவ படிப்பா?

சமோசா விற்கக்கூடிய நபர்கள் கூட அந்த பொருளுக்கு அவர்கள் தான் விலையை நிர்ணயிப்பார்கள். ஆனால் விவசாயிகள் விளைவிக்கக்கூடிய பொருளுக்கு அவர்களால் விலை நிர்ணயிக்க முடியவில்லை. விவசாய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய கேரளாவில் உள்ளது போல் நாமும் ஒரு ஆணையம் ஏற்படுத்த வேண்டும். உழவர்களே அந்த ஆணையத்தில் காலநிலைக்கு ஏற்ப 3 மாதங்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்கிறார்கள்” என்றார்.