×

“விவசாய கடன் ரத்து அறிவிப்பு இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றம்”- செளமியா அன்புமணி

 

கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக சட்டமன்ற குழு தலைவர் செளமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செளமியா அன்புமணி, “அறிவித்தபடி கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நீர்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தர்மபுரி - காவிரி உபரி நீர் திட்டம் போன்ற நீர்பாசன திட்டங்கள் குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூவம் நதி தொடர்பான திட்டத்தில் உரிய தெளிவில்லை. சேவை உரிமை பெறும் சட்டம் இந்தியாவில் 21 மாநிலங்களில் உள்ளது. இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டுவந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாய கடனை முழுமையாக ரத்து செய்வோம் என்ற அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் வரவில்லை. இது தமிழகத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றம்” என்ரார்.