அப்பா நலமுடன் உள்ளார்- செளந்தர்யா ரஜினிகாந்த்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார் என அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்றுமாலை அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடவுள் மற்றும் ரசிகர்களாகிய உங்கள் ஆசீர்வாததால் அப்பா நலமுடன் உள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செளந்தர்யா கூட் சமூக வலைதளத்தில் ஆடியோ வடிவிலும் பதிவு செய்துள்ளார். அதில், “பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு ஜீரணிக்க முடியவில்லை. மூன்று நாளைக்கு முன்னதாக கூட செல்போனில் பேசினேன். அவரது மறைவு ஏற்க முடிய வில்லை. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.