×

சவுமியா அன்புமணி நீக்கம் : பசுமை தாயகம் அமைப்பின் புதிய தலைவர் தேர்வு..!

 
பாமக பொதுக் குழுவில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதில் 

பாமக துணை அமைப்பான 'பசுமைத் தாயகம்' தலைவராக சவுமியா அன்புமணி இருந்து வந்த நிலையில், அவர் அந்த பொறுப்பில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். தலைவர் பொறுப்பில் இருந்து சவுமியா அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், புதிய தலைவராக பாமக நிறுவனர் ராமதாஸுன் மகள் ஸ்ரீகாந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

பாமகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு, புதிய நிர்வாகிகள் தேர்வு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள ராமதாஸுக்கு அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து சவுமியா அன்புமணி நீக்கப்பட்டு, புதிய தலைவராக ஸ்ரீகாந்தியை நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, பாமகவின் புதிய தலைவராக ராமதாஸை நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பாமக பொதுச் செயலாளராக முரளி சங்கரை நியமிக்கவும், கௌரவ தலைவராக ஜி.கே. மணி நியமனத்துக்கும் ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, "25 எம்எல்ஏக்களுடன் சட்டமன்றத்திற்கு செல்வோம். ஆட்சியில் பங்கு பெறுவோம்; இனிமேல் தான் அய்யாவின் ஆட்டத்தை பார்க்க போகிறீர்கள். பாமக கொடியை சௌமியா அன்புமணி பயன்படுத்தக்கூடாது" என கூறினார்.

மேலும் பேசிய அவர், 'மருத்துவர் பட்டமும் எம்பி, அமைச்சர் பதவிகளும் அன்புமணிக்கு ராமதாஸ் போட்ட பிச்சை. அன்புமணி செய்தது பச்சைத் துரோகம். அதிகாரமிருந்தால் தனியாகக் கட்சி தொடங்கட்டும். இது ராமதாஸ் வளர்த்தெடுத்த கட்சி. அவர்தான், பாமக எனும் கோட்டைக்கு ராஜா. இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது' என்றார்.