×

“போதும் போதும் நிறுத்துங்க”- வந்தே பாரதம் பாடலை பாதியில் நிறுத்த சொன்ன சோனியா காந்தி

 

வந்தே மாதரத்தின் முழுமையான பாடலுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

என்ன ரகசிய கூட்டணியா மாணிக் ப்ரோ?

வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு சாப்பாடு இருக்கீங்க pic.twitter.com/407dhuXkEf

— அருண் மனோகரன் (@kalaingarism) August 16, 2026



காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 வரிகள் மட்டுமே பாடப்பட்டு வரும் நிலையில், தலைமையகத்தில் பாடல் குழுவினர் முழுப் பாடலையும் பாடி முடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடல் குழுவினர் முதல் 2 வரிகளுடன் நிறுத்தாமல், தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் அனைத்து வரிகளையும் முழுமையாகப் பாடத் தொடங்கினர். பாடலின் நீளம் அதிகரிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பாடலை இத்துடன் நிறுத்துமாறு கைகளால் சைகை காட்டினர். தலைவர்கள் சைகை செய்தபோதிலும், பாடல் குழுவினர் பாடலை இடையில் நிறுத்தாமல் முழுமையாகப் பாடி முடித்தனர்.