விஜயின் கார் ஓட்டுநர் மகன் தமிழக அரசின் கொறடாவாக தேர்வு
தமிழக அரசின் கொறடாவாக சபரிநாதன் தேர்வாகிறார்.
முதலமைச்சர் விஜயின் உதயவியாளரான ராஜேந்திரனின் மகன் சபரிநாதன், தமிழக அரசின் கொறடாவாக தேர்வாகிறார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் அரசு கொறடாவை அறிவித்துள்ளார். விஜய் உடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கார் ஓட்டுநராக பணியாற்றிவரும் ராஜேந்திரனின் மகன் சபரிநாதனுக்கு தவெக வேட்பாளராக வாய்ப்பளித்த விஜய், தற்போது எம்.எல்.ஏவாக்கியும், அரசு கொறடாவாக்கியும் அழகு பார்த்துள்ளார்.
விருகம்பாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாகப் போட்டியிட்ட, விஜய்யின் கார் ஓட்டுநர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் மொத்தம் 58,041 வாக்குகள் பெற்றுள்ளார். 20,432 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். சபரிநாதனை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட 39,139 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட விருகை வி.என்.ரவி 34,837 வாக்குகளும் பெற்றனர் என்பது கூடுதல் தகவல்.