×

மதுபாட்டிலுக்கு சமூக நல வரி விதிப்பு- மதுபானம் விலை உயர வாய்ப்பு

 

 'தமிழ்நாடு மதிப்பு கூட்டப்பட்ட வரி (திருத்தச்) சட்டம், 2026'ன் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி (Cess)விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


த.வெ.க. அரசு மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தவும், காலி மதுபாட்டில்களை அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்யவும், மதுவிலக்கு மற்றும் மறுவாழ்வு, மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றுக்காக 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி்' எனும் புதிய வரி விதிப்பை கொண்டு வந்துள்ளது. இந்த வரி, ஒரு மதுப்பாட்டிலுக்கு அதிகபட்சம் ரூ.20 என நிர்ணயிக்கப்படும். இது ஏற்கனவே உள்ள வாட் வரிக்கு மேலாக வசூலிக்கப்படுகிறது.

டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை வழங்கும் சப்ளையர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மீது கூடுதல் வரி மற்றும் கட்டணங்கள் (பெட்டி ஒன்றுக்கு ரூ.90 வரை மற்றும் கூடுதல் செஸ்) விதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வரை வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.