மக்களுக்கு மேலும் அதிர்ச்சி! வரலாறு காணாத வகையில் சோப்பு விலை உயர்வு
மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக துணி துவைக்கும் சோப்பு, லிக்யூட், வாஷிங் பவுடர் விலை உயர்கிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சிறு தொழில் சோப்பு & டிடர்ஜெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “டிடர்ஜெண்ட் சோப்பு, லிக்யூட் டிடர்ஜெண்ட் மற்றும் வாஷிங் பவுடர் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் வரலாறு காணாத வகையில் விலை அதிகரித்துள்ளது. அத்துடன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் டிடெர்ஜெண்ட் சோப்பு, லிக்யூட் டிடர்ஜெண்ட் மற்றும் வாஷிங் பவுடர் தயாரிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விலை ஏற்றத்திற்கு வாடிக்கையாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஈரான் தற்பொழுது போர் நடைபெற்று வர சூழலின் காரணமாக அங்கிருந்து கச்சா எண்ணெய் வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர், தங்கம், எண்ணெய் விலை தாருமாறாக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.