ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும் - சினேகன் பரபரப்பு கருத்து
Nov 27, 2023, 14:15 IST
பருத்திவீரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக கவிஞர் சினேகன் கருத்து தெரிவித்துள்ளார்.
பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வைத்த குற்றச்சாட்டுகள் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக திரைபிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கணி, பொன்வன்னன் உள்ளிட்ட பலரும் இயக்குநர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.