×

சென்னையில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 30 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. வருகின்ற 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் காலை 10 மணி வரை மட்டுமே மளிகை கடைகள், காய்கறிகள், இறைச்சி கடைகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரையில் கொரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களை விட அதிகரித்து வருவதால் இங்கு ஊரடங்கு கட்டுப்பாட்டை
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 30 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. வருகின்ற 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் காலை 10 மணி வரை மட்டுமே மளிகை கடைகள், காய்கறிகள், இறைச்சி கடைகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் கொரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களை விட அதிகரித்து வருவதால் இங்கு ஊரடங்கு கட்டுப்பாட்டை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மக்கள் வெளியில் சுற்றுவதைத் தடுக்கும் வகையில் ஆங்காங்கே போலீசார் சாலைகளில் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை சென்னையில் 4 இலட்சத்து 56 ஆயிரத்து 496 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,031 பேர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக அண்ணாநகரில் 5270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தேனாம்பேட்டையில் 4096, அம்பத்தூரில் 4,359, திருவிக நகரில் 3791 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது” என கூறியுள்ளார்.