☰
×

கந்த சஷ்டி 5-ஆம் நாள் : இன்று முருகப்பெருமானின் திருமேனியில் வியர்த்து கொட்டும் அதிசயம் நடக்கும் நாள்!

 

கந்தசஷ்டி விழாவின் மிகவும் அற்புதமான, முக்கியமான திருநாள் இதுவாகும்.கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான இன்று மிகவும் விசேஷமான நாளாகும். காரணம், நாளை நடக்கும் சூரசம்ஹாரத்தின் போல் சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகப் பெருமான், அன்னை பராசக்தியிடம் இருந்து சக்தி வாங்கும் வைபவம் இந்த ஐந்தாவது நாளில் நடைபெறும். 

புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான சிக்கல் சிங்கார வேலர் கோவிலில், அன்னையிடம் இருந்து வேல் வாங்கிய பிறகு, முருகப் பெருமானின் விக்ரஹத் தில் வியர்த்துக் கொட்டும் அதிசயம் நடக்கும் நாள் இன்று.

சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு புறப்படும் முருகப் பெருமானுக்கு அளிப்பதற்காக, உலகில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றாக்கி, அதோடு தன்னுடைய சக்தியையும் இணைத்து வேலாக உருமாற்றினார் சிவ பெருமான். அந்த வேலை அப்படியே பராசக்தியிடம் கொடுத்தார். அன்னை பராசக்தி, அந்த வேலில் தன்னுடைய சக்தியையும் சேர்த்து சக்திவேலாக முருகப் பெருமானிடம் வழங்கினார். அன்னை வழங்கிய சக்திவேலை முருகப் பெருமான் தன்னுடைய திருக்கரத்தில் வாங்கியதும் அது வெற்றிவேலாக மாறியது. அந்த வேலைக் கொண்டு மாமரமாக உருமாறிய சூரனின் உடலை இரண்டாக கிழித்து, ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவற் கொடியாகவும் மாற்றி தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகப் பெருமான்.

கந்தசஷ்டியின் இந்த அற்புதமான ஐந்தாம் நாளில் நாமும் வேலை வழிபட்டு, வேலை போற்றும் மந்திரங்களை சொல்லி வழிபடுவதால் முருகனின் அருள் கிடைப்பதுடன், நம்முடைய வேண்டுதல்களும் உடனடியாக நிறைவேறும். 


சஷ்டி விரதம் இருப்பவர்கள் வழக்கம் போல் இன்றும் புதிதாக கலசத்திற்கு அல்லது முருகனின் படத்திற்கு புதிய புதிதாக மலர்கள் சூட்டி, மந்திர ஜபம் செய்ய வேண்டும். 
ஷட்கோண கோலத்தின் மீது இன்று 5 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். 
இன்று முருகப் பெருமானுக்கு நிறைய பழங்களை நைவேத்தி யமாக வைத்து வழிபட வேண்டும். என்னென்ன பழங்கள் கிடைக் கிறதோ அவற்றை வைத்து வழிபடலாம். பழங்கள் ஏதும் கிடைக்கவில்லை அல்லது பல வகையான பழங்கள் வாங்குவ தற்கு வசதி இல்லை என்பவர்கள் எளிமையாக இரண்டு வாழைப் பழங்கள் வைத்து வழிபடலாம்.

இன்றைய தினம் முருகப் பெரு மானுக்கு மிகவும் விருப்பமான தேனும், திணை மாவும் கொடுக்க வேண்டும். சுத்தமான திணையை நேரடியாகவோ அல்லது தண்ணீ ரில் கழுவி, காய வைத்தோ வறுத்து, அதை பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த மாவுடன் நாட்டு சர்க்கரை, நெய், தேன் கலந்து உருண்டையாகவோ அல்லது தேன் மட்டும் கலந்தோ தானமாக கொடுக்கலாம். 

நைவேத்தியம் செய்யும் போது இவற்றையும் வைத்து வழிபட்ட பிறகு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அங்கிருப்பவர்களுக்கு இதை தானமாக கொடுக்கலாம்.
முருகனுக்கு மிகவும் விருப்பமான தேன், திணை மாவை தானமாக கொடுப்பதனால் நமக்கு சகல விதமான சம்பத்துக்கள், செல்வ நலன்களும் வந்து சேரும். எதிரிகள் தொல்லை நீங்கும். பகை அழியும். வெற்றிகள் சேரும்.

இன்றைய தினம்  செய்யக்கூடிய வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது வேல் வழிபாடு. ஐந்தாம் நாளில் வேல் வழிபாடு மிகவும் சிறப்புக்குரியதாகும். முருகன் வேல் வாங்குகிற நாள் என்பத னால் வேல் வழிபாட்டை மேற் கொள்வது சிறப்பான பலன்களை தரும்.வேல் வழிபாடு செய்வதனால் அனைத்து விதமான பகை, எதிரிகள் தொல்லை அழியும். வெற்றி தரும் வழிபாடு தொட்ட அனைத்தையும் வெற்றியாக்கி தரும்.


கந்தசஷ்டியின் 5ம் நாளில் முருகப் பெருமானின் அருளை பெருவதற்கு இந்த ஒரு வார்த்தை மந்திரத்தை சொன்னாலே போதும். 

ச ர வ ண ப வ

ர வ ண ப வ ச

வ ண ப வ ச ர

ண ப வ ச ர வ

ப வ ச ர வ ண

வ ச ர வ ண ப

இந்த நாளில் வேல் மாறல் படித்து, வேல் பூஜை செய்வது சிறப்பு. வேல்மாறல் பதிகத்தை முழுவதுமாக படிக்க முடியாதவர்கள், " ஓம் முருகா சரணம். வேலும் மயிலும் சேவலும் துணை" என 6 முறை சொல்லி விட்டு, 

"திருத்தணியில் உதித்தருளும்

ஒருத்தன்மலை விருத்தன் என

துளத்தில் உறை கருத்தன் மயில்

நடத்து குஹன் வேலே" என்ற வேல்மாறலின் துவக்க அடியை 6 முறை சொன்னாலே போதும்.


தினமும் காலை மாலை கந்த சஷ்டி கவசத்தினை படித்தோ, கேட்டோ முருகப்பெருமானின் அருளை பெறுங்கள்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/xItVs07WLsk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/xItVs07WLsk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">