“ஜெயிலர் 2” படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு..!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில், 'போதி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் அக்.15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்பட்டது.ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் போதி என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டிருந்தது. இப்படத்தில் திலீப் என்ற கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்.
Introducing SJ Suryah as Bodhi from the world of #Jailer2 💥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @iam_SJSuryah #SurajVenjaramoodu @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju… pic.twitter.com/FKVlMlc0rM
— Sun Pictures (@sunpictures) September 19, 2026