விஜய் முதல்வரே அல்ல... உண்மையான முதல்வர் யார் தெரியுமா?- பரபரப்பை கிளப்பிய சிவசங்கர்
இந்த ஆட்சி மாற்றத்திற்கு கடைசி 3 நாள் தான் காரணம் என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சிவசங்கர், “கொளத்தூரில் மு.க.ஸ்டாலினின் தோல்வி ஒவ்வொரு தொண்டரின் மனதிலும் மாறாத வடுவாக மாறிவிட்டது. த.வெ.கவில் விஜய் முதல்வரே அல்ல.. உண்மையான முதல்வர் யார் தெரியுமா..? நிழல் முதல்வராக இருப்பவர் ஆதவ் அர்ஜூனா தான். நல்ல முதலமைச்சரை இழந்திருக்கிறோம். அனைத்து அமைச்சர்களும் ஜோக்கரா இருக்காங்க.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதால் அது மிகப்பெரிய மாற்றம் அல்ல. ஒரு 30, 35 சதவீதம் பேர் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். அதில் 20 சதவீதம் பேர் விஜய் ரசிகர்கள். வழக்கமாக ஒவ்வொரு புதிய கட்சி உருவெடுக்கின்ற பொழுதெல்லாம்
ஒரு சிலர் ஆட்சி மாற்றம் வேண்டுமென வாக்களிப்பர். அது சீமான் வந்தாலும் அதுபோன்று பலரும் வந்தாலும் அவருக்கு வாக்களிப்பர், இதிலே கூடுதலாக வாக்களித்திருக்கின்றார்கள். இந்த ஆட்சி மாற்றத்திற்கு கடைசி 3 நாள் தான் காரணம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கு என்கின்ற செய்தியை இன்ஸ்டாகிராமில் பரப்பி, அதற்குத் தீர்வு விஜய் தான் அப்படிங்கிற அந்த எண்ணத்தை இளைஞர்களிடத்திலே, மகளிரிடத்திலே ஏற்படுத்தி தான் இந்த மாற்றம்” என்றார்.