சென்னையில் முதற்கட்டமாக 20 டபுள் டெக்கர் பேருந்துகள் கொண்டு வரப்படும் - அமைச்சர் சிவசங்கர்
Jan 11, 2026, 16:00 IST
சென்னையில் முதற்கட்டமாக 20 டபுள் டெக்கர் பேருந்துகள் கொண்டு வரப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “எடப்பாடி பழனிச்சாமி வீர வசனம் பேசுவார். பிறகு டெல்லி சென்று சரண்டர் ஆவார் ஒவ்வொரு முறையும் இது நடைபெறும், இப்போதும் நடந்துள்ளது. போன வாரத்தில் நாங்கள் தனித்து ஆட்சி என்று அறிவித்தவர், அடுத்த இரண்டு நாட்களில் டெல்லி சென்று சரண்டர் ஆகியிருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. கட்டணக்கொள்ளை குறித்து புகாரளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் முதற்கட்டமாக 20 டபுள் டெக்கர் பேருந்துகள் கொண்டு வரப்படும். 20 டபுள் டெக்கர் பேருந்துகளை வாங்குவதற்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம் டெண்டர் விட்டுள்ளது” என்றார்.