சிவகாசி வெடிவிபத்து- பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு
சிவகாசி செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது. பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆலையில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் சிக்கிய மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி மாயமான மற்றொருவரை தீயணைப்புத்துறையினர் தேடிவருகின்றனர். உடல் சிதறி பட்டாசு ஆலை உரிமையாளர், தொழிலாளர் பலியான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு தொழிலாளர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.