×

"என்கிட்ட 2 டிகிரி இருக்கு அத வச்சு பிழைச்சுக்குவேன்" - சிவகார்த்திகேயன் 

 

ஒருத்தர் படித்தால் அடுத்த தலைமுறை நன்றாக இருக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் சிவகார்த்திகேயன், “எங்க அப்பா ஒருவேளை சாப்பிட்டு பள்ளிக்கு போனதால, நான் மூன்று வேளையும் சாப்பிட்டு பள்ளி போனேன். ஒரு தலைமுறையில் ஒருத்தர் படித்தால் அடு்த்த தலைமுறை நன்றாக இருக்கும்னு என் குடும்பத்தில் இருந்தே நான் பார்த்துருக்கேன். எங்க அப்பா அவர் வீட்டில் இருந்த வசதியை வைத்து நினைத்த படிப்பை படிக்க முடியவில்லை. ஒரு டிகிரிதான் படித்தார். ஆனால் என் அப்பா என்னை இரண்டு டிகிரி படிக்க வைத்தார். என் அக்கா மூன்று டிகிரி முடிச்சு இருக்காங்க. இப்ப 

மாணவ மாணவியரின் வாழ்க்கையை மாற்றும் அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி. பின்னணி இல்லாமல் திரைத்துறையில் நுழைவது கடினம், அதில் தொடர்வதும் சிரமம், சினிமாவிலிருந்து அனுப்பினால் என்னிடம் ரெண்டு டிகிரி இருக்குனு தைரியம் இருக்கிறது. பிழைத்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை உண்டு. வாழ்க்கையில் நீங்க ஜெயிக்கணுமா? சம்பாதிக்கணுமா? கார், வீடு வாங்கணுமா?, அம்மா, அப்பாவ பாத்துக்கணுமா? எல்லார் முன்னாடியும் மரியாதையா இருக்கணுமா? எல்லாருக்கும் சமமா இருக்கணுமா? இதுக்கெல்லாம் ஒரே தீர்வுதான் படிங்க... மார்க்குகாக கொஞ்சமும், வாழ்க்கைக்காக கொஞ்சமும் படிங்க”” என்றார்.