×

“சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படத்தின் கதைதான் பராசக்தி படம்”- சிவகார்த்திகேயன்

 

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது எதிர்பாராத ஒன்று என நடிகர் சிவகார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து கருத்து கூறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், “நடிகர் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது எதிர்பாராத ஒன்று. விஜய் படம் எப்போது வெளியானாலும் அன்றைய தினம் கொண்டாட்டம்தான்.  சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படத்தின் கதைதான் பராசக்தி படம். பராசக்தி படம் தணிக்கைக்கு சென்றபோது எதிர்பாராத இடங்களில் கட் கொடுத்தார்கள். தணிக்கையின்போது என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாது. படம் பார்க்கும் உறுப்பினர்களின் கருத்தை பொறுத்து மாறுபடும். இந்த சிக்கல்களை தீர்க்க படத்தை 2 மாதங்கள் முன்பாகவே தணிக்கைக்கு அனுப்புவது நல்லது. சென்சாரில் 25 கட் கொடுக்கப்பட்டாலும், கட் செய்த காட்சிகளைவிட மற்ற காட்சிகளில் சொல்ல வந்த கருத்துக்களை சொல்லிவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

பட வெளியீட்டின் போது ஏற்படுகிற அழுத்தம் என்னுடைய 4, 5 படங்களுக்கும் இருந்தது. அது வெளியில் தெரியவில்லை. இப்படத்தில் தான் எல்லோருக்கும் தெரிந்தது. பராசக்தியில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவும் எதிர்ப்பும் கிடையாது. அமரன் படத்திற்காக எல்லோருக்கும் தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி. முகம் தெரியாத நபர்களின் எதிர்மறை விமர்சனங்களை நான் கண்டுகொள்வதில்லை. சமூக வலைத்தளங்களை திறந்தாலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரை நம்மை விமர்சிப்பதாக தோன்றுகிறது. அதனை கண்டுகொள்ளாமல் என் வேலையில் கவனம் செலுத்துகிறேன்.” என்றார்.