சிவாஜி கணேசனின் கம்பீர நடையும் செழுந்தமிழும் என்றும் அழியாது: எக்ஸ் தளத்தில் சிவாஜியின் சாதனைகளை நினைவு கூர்ந்த மு.க.ஸ்டாலின்!
Oct 1, 2026, 10:45 IST
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 99-வது நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
சிம்மக் குரலாலும் செழுந்தமிழ் உச்சரிப்பாலும் கம்பீர நடையாலும் திரையுலகை ஆண்ட நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் பிறந்தநாள்.
இந்நாளில், நடிகர் திலகத்துடன் பழகிய அழகிய தருணங்களையும், ஈடு இணையற்ற அவரது நடிப்பாற்றலையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.