×

சிவகிரி இரட்டை கொலை வழக்கு - 4 பேர் கைது

 

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதியை அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ஒரு தோட்டத்தில் அமைந்துள்ள வீட்டில் வயதான தம்பதியரான ராமசாமி, பாக்கியம்மாள் வசித்து வந்தனர். அந்த தோட்டத்தில் உள்ள வேலைகளை கவனித்துக்கொண்டு அங்கேயே வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் கதவு திறந்த நிலையில், கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

5 தனிப்படைகள் அமைத்து  குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், இரட்டைக் கொலை சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அரச்சலூர் பகுதியை சேர்ந்த அச்சியப்பன், மாதேஷ், ரமேஷ், ஞானசேகரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.