×

சிவகங்கை: ராணுவ வீரர் அம்மா, மனைவி படுகொலை! – முன்விரோதம் காரணமா?

சிவகங்கை மாவட்டத்தில் ராணுவ வீரரின் அம்மா மற்றும் மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையாளர்கோவில் அருகே உள்ள முக்கூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சந்தியாகு. இவரது மனைவி ராஜகுமாரி (60). இவர்கள் மகன் ஸ்டீபன். தற்போது ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சினேகா (30). இதனால் வீட்டில் சந்தியாகு, ராஜகுமாரி, சினேகா ஆகியோர் மட்டுமே உள்ளனர். நேற்று இரவு சந்தியாகு தோட்டத்தின் காவல் பணிக்காக சென்றிருந்தார்.
 

சிவகங்கை மாவட்டத்தில் ராணுவ வீரரின் அம்மா மற்றும் மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையாளர்கோவில் அருகே உள்ள முக்கூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சந்தியாகு. இவரது மனைவி ராஜகுமாரி (60). இவர்கள் மகன் ஸ்டீபன். தற்போது ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சினேகா (30). இதனால் வீட்டில் சந்தியாகு, ராஜகுமாரி, சினேகா ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

நேற்று இரவு சந்தியாகு தோட்டத்தின் காவல் பணிக்காக சென்றிருந்தார். இன்று காலை வீட்டுக்கு வந்த போத சினேகா மற்றும் ராஜ்குமாரி ஆகியோர் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தனர். வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து உடனடியாக அவர் காளையார்கோவில் போலீசில் தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தார்.

சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் தடயவியல் துறையினர், மோப்பநாய் உதவியோடு ஆய்வு நடத்தப்பட்டது. கொள்ளையடிக்க வந்தவர்கள் கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வேறு ஏதாவது முன்விரோத பிரச்னை காரணமாக கொலை செய்துவிட்டு போலீசை திசை திருப்ப கொள்ளை நடந்தது போல காட்டியுள்ளார்களா என்று விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ராணுவ வீரரின் தாய், மனைவி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.