×

அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்தாரா சிவசங்கர் பாபா?

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. ஆன்மீகவாதி என தனக்கு தானே சொல்லிக்கொள்ளும் இவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகள் பகீர் குற்றச்சாட்டினை முன்வைத்தனர். இவருக்கு 2 ஆசிரியைகள் உடந்தையாக இருந்ததாகவும், அவர்கள் மாணவிகளை மூளைச்சலவை செய்து பாபாவிடம் அனுப்பி வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து போக்சோ உள்ளிட்ட 8பிரிவுகளின் கீழ் சிவசங்கர் பாபா மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இதனையறிந்த
 

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. ஆன்மீகவாதி என தனக்கு தானே சொல்லிக்கொள்ளும் இவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகள் பகீர் குற்றச்சாட்டினை முன்வைத்தனர். இவருக்கு 2 ஆசிரியைகள் உடந்தையாக இருந்ததாகவும், அவர்கள் மாணவிகளை மூளைச்சலவை செய்து பாபாவிடம் அனுப்பி வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து போக்சோ உள்ளிட்ட 8பிரிவுகளின் கீழ் சிவசங்கர் பாபா மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இதனையறிந்த சிவசங்கர் பாபா தலைமறைவானார்.

இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டார். டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை சென்னை அழைத்து வர டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. இதனிடையே சிவசங்கர் பாபா ஆசிரமம், சுஷில் ஹரி பள்ளி அமைந்துள்ள 64 ஏக்கர் நிலத்தை வருவாய் துறையினர் அளந்து வருகின்றனர். அரசு புறம்போக்கு நிலத்தை அவர் அபகரித்துள்ளாரா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.