×

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் SIT, ஒரு நபர் ஆணைய விசாரணை சஸ்பெண்ட் - உச்சநீதிமன்றம்

 

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் அமைத்த முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தனிநபர் ஆணையத்தின் விசாரணைக்கும் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் அமைத்த முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தனிநபர் ஆணையத்தின் விசாரணைக்கும் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். தமிழ்நாடு காவல்துறை தனிநபர் ஆணையம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இதுவரை நடத்திய அத்தனை விசாரணை ஆவணங்களையும் சிபிஐ இடம் உடனடியாக ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணை குழுவில் இடம்பெறும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் யார் யார் என்பதை குழுவிற்கு தலைமை தாங்கும் நீதிபதியான அஜய் ரஸ்தோகியே முடிவு செய்வார் என உச்ச நீதிமன்றம் தனது எழுத்துப்பூர்வ உத்தரவில் தெளிவுபடுத்தி உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் காவல்துறையினர் அனுப்பிய விதம் குறித்து பல்வேறு ஆழமான சந்தேகங்களை உச்ச நீதிமன்றம் எழுப்பி உள்ளது. குறிப்பாக தமிழக வெற்றி கழக பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கியது தொடங்கி கூட்ட நெரிசலில் நடைபெற்றதற்கு பிறகு அரசு அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியது வரை பல்வேறு விஷயங்கள் குறித்த தங்களது சந்தேகத்தை நீதிபதிகள் வலுவாக எழுத்துப்பூர்வமாகவே வெளிப்படுத்தி உள்ளனர்.