×

SIR- மேலும் 2 லட்சம் பேருக்கு நோட்டீஸ்

 

எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்களை முறையாக சமர்பிக்காத மேலும் 2 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து  97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் கணக்கெடுப்புப் படிவத்தை முறையாக, முழுமையாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 

இந்நிலையில் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்களை முறையாக சமர்பிக்காத மேலும் 2 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கணக்கெடுப்பு படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தற்போது மேலும் 2 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.