×

மன்னிப்பு கேட்டார் பாடகர் வேல்முருகன்..!!

 

பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில், முருகன் பாடல், நாட்டுப்புற பாடல், தமிழக வெற்றிக் கழக பாடல் ஆகியவை பாடப்பட்டன. விஜயை வாழ்த்தி ஒரு பாடலை பாடகர் வேல்முருகன் பாடினார். அவர் பாடி முடித்ததும் மேடை ஏறிய விஜய், அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். அப்போது, பாடகர் வேல்முருகன், விஜய்யுக்கு அறுபடை வீடு முருகனின் படத்தை நிை பரிசாக வழங்கினார்.

விழாவில், மருதமலை மாமணியே முருகையா என்ற முருகன் பாடலை அவமதித்து இழிவுபடுத்திப் பாடிய பாடகர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை மாநகரக் காவல்துறையில் வழக்கறிஞர் குற்றாலநாதன் புகார் அளித்து இருந்தார். முருக பக்திப் பாடலை அரசியல் ரீதியாகத் திரித்துப் பாடி முருக பக்தர்கள் மனம் புண்படும்படி நடந்துகொண்ட பாடகர் வேல்முருகன் மற்றும் அவருக்குத் தூண்டுதலாக இருந்த தவெக தலைவர் விஜய், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்து புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதனால், வேல்முருகன் உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் பாடகர் வேல்முருகன் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேல்முருகன் கூறுகையில், நான் யதார்த்தமாகவே இந்தப் பாடலைப் பாடினேன்.. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. இந்தப் பாடலைப் பாடியதற்கும், தவெக தலைவர் விஜய்க்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. என் பாடலால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முருகனை அவமதிப்பது என்பது என்னை நானே கத்தியால் குத்திக் கொள்வதற்கு சமம்" என்று கூறியுள்ளார்.