×

பாடகர் எஸ்.பி.பியின் நினைவாற்றலில் முன்னேற்றம்: மருத்துவமனை தகவல்

உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனாவால் கடந்த 5 ஆம் தேதி, இசை ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாதிக்கப்பட்டார். கொரோனா உறுதியான போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் அறிகுறி இருப்பதாலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் நாட்கள் போக போக, அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. செயற்கை சுவாசத்தின் உதவியுடனே அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக வெளியான தகவல், மக்களை பதைபதைக்க வைத்தது. அவர் விரைவில் நலம் பெற்று, மக்களை மகிழ்விக்க மீண்டும் மேடை ஏற வேண்டும்
 

உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனாவால் கடந்த 5 ஆம் தேதி, இசை ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாதிக்கப்பட்டார். கொரோனா உறுதியான போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் அறிகுறி இருப்பதாலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் நாட்கள் போக போக, அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. செயற்கை சுவாசத்தின் உதவியுடனே அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக வெளியான தகவல், மக்களை பதைபதைக்க வைத்தது. அவர் விரைவில் நலம் பெற்று, மக்களை மகிழ்விக்க மீண்டும் மேடை ஏற வேண்டும் என கோடான கோடி மக்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

இசை அவரை நிச்சயம் மீட்டுக் கொண்டு வரும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்ததால், எஸ்.பிபி பாடிய பாடல்கள் ஒலிக்க மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே இசைஞானி இளையராஜா, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் எஸ்.பிபி திரும்பி வர வேண்டும் என கூறி வீடியோ வெளியிட்டனர்.

நேற்று அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், எஸ்.பிபியின் உடல் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தல்களை கேட்டு செயல்படும் அளவிற்கு எஸ்.பிபியின் நினைவாற்றலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.