சிங்கப்பெண் திட்டம் நாளை தொடக்கம்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையின் தொடக்க விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நாளை முதலமைச்சர் விஜய் தலைமையில் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய், நாளை மாலை 5 மணிக்கு ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வெளியாகி உள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை முதல்வர் விஜய் தொடங்கிவைக்கிறார். இப்படை அவரது நேரடி கண்காணிப்பில் செயல்படும். பொது இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை உடனுக்குடன் தடுத்து நடவடிக்கை எடுக்கவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் சிங்கப்பெண்களின் பங்கு, அரசின் நோக்கங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகளும் கருத்துகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் மற்றும் ஆட்சி சார்ந்த முக்கிய செய்திகளுக்கு நாளைய நிகழ்வை அனைவரும் எதிர்நோக்கி உள்ளனர். ஏற்கனவே, கடந்த மாதம் 29ம் தேதி தொடக்க விழா திட்டமிடப்பட்டு, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.