×

#BREAKING தவெகவில் சிங்கை ராமச்சந்திரன்  

 

அதிமுகவிலிருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன் முதல்வர் தவெக தலைவருமான விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். 

அதிமுகவின் ஐடிவிங் மாநிலசெயலாளராக இருந்தவர் சிங்கை ராமச்சந்திரன். 2024ஆம் ஆண்டு கோவை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இவர், கடந்த மாதம் 23ஆம் தேதி அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த முடிவை நான் கோபத்திலோ, வருத்தத்திலோ, அல்லது எந்தவித தனிப்பட்ட எதிர்பார்ப்பு நிறைவேறாததாலோ எடுக்கவில்லை, என் மனசாட்சிக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளேன், கடந்த சில மாதங்களாக கட்சிக்குள் நடந்த சில நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தன என்றும் அறிக்கை விட்ட சிங்கை ராமச்சந்திரன் கட்சியிலிருந்து வெளியேறினார்.

Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது… pic.twitter.com/1fePzSvzIe

— Singai G Ramachandran (@SingaiGR) August 11, 2026


இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன் முதல்வர் தவெக தலைவருமான விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிங்கை ராமச்சந்திரன், “மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களை சந்தித்தேன். மற்றும் அவர் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். அனைவரின் ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் நாடுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.