#BREAKING சிங்கை ராமச்சந்திரனுக்கு முக்கிய பொறுப்பு- விஜய் அதிரடி
சிங்கை ராமச்சந்திரன் "ஸ்டார்ட் அப் டி.என்" நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்!
அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன், அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் "ஸ்டார்ட் அப் டி.என்" (STARTUP TN) நிறுவனத்தின் தமிழ்நாடு தலைமை செயல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்சியில் இணைந்த ஒரு மாதத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக மாணவர் அணி செயலாளராக இருந்தவர் சிங்கை ராமச்சந்திரன் என்பது குறிப்பிடதக்கது. இவரது தொழில்நுட்ப அறிவு, திரைத்துறையினருடனான தொடர்புகளால் ஜெகதீஷுக்கும் நெருக்கமாகி அதுவே தற்போது விஜய்யை நெருங்கி பொறுப்பு அளவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தித் தந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.சிங்கை ராமசந்திரன் ஐடி விங் செயல்பாடுகளை கற்றுத் தேர்ச்சி அடைய வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார். சிங்காநல்லூர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்காக பல இடங்களில் இலவசமாக இ-சேவை மையங்களை தொடங்கியுள்ளார். கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றிக்கு இவரது ஐடி விங்கின் பங்களிப்பும் அதிகமாகும். எனவே இவரது திறமையை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ளவே "ஸ்டார்ட் அப் டி.என்" நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை விஜய் வழங்கியுள்ளார்.