×

எளிமை வேடமா? தவெக எம்.எல்.ஏ-க்களின் கார் ரகசியங்களை உடைத்த அதிமுக!

 

முதல்வர் விஜய் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிப் பணிகளுக்காக அரசு சார்பில் புதிய கார்களும், ஓட்டுநர் மற்றும் எரிபொருள் பராமரிப்பிற்காக மாதம் ₹75,000 படிகளும் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக உறுப்பினர்கள், மாநிலத்தின் நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டி தங்களுக்கு அரசு கார்கள் வேண்டாம் எனப் பேரவையில் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்துப் பேசிய ஆளுங்கட்சியான த.வெ.க-வின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவதை ஆடம்பரமாகப் பார்க்கக் கூடாது என்றும், எளிய பின்னணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தொகுதி முழுவதும் சென்று சேவையாற்ற இது அத்தியாவசியமானது என்றும் வாதிட்டார். மேலும், த.வெ.க-வின் 35 எம்.எல்.ஏ-க்களிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்ற தகவலைச் சுட்டிக்காட்டி, எளிய உறுப்பினர்களின் தொகுதிப் பணியை உறுதி செய்யவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழியிடம் மட்டும் 14 கார்கள் உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து அ.தி.மு.கவை சேர்ந்த தனபால் ஆறுமுகம் தனது முகநுல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மொத்த த.வெ.க எம்.எல்.ஏ-க்கள் 107 பேரில், 35 பேரிடம் மட்டுமே சொந்தப் பெயரில் கார் இல்லை. 

ஏற்கனவே சொந்தக் கார் வைத்துள்ளவர்கள் 72 பேர். 

அதிலும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 40 பேர் தலா 2 கார்களைச் சொந்தமாக வைத்துள்ளனர்.

5-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சொந்தமாக வைத்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆகும்.

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. கனிமொழி பிரமாணப் பத்திரத் தகவல்களின்படி அவரிடம் மட்டும் 14 கார்கள்/வாகனங்கள் உள்ளன. 

அவரது கணவரிடம் உள்ள கார்கள்/வாகனங்கள் 12

எம்.எல்.ஏ கனிமொழி பெயரில் உள்ள வாகனங்கள் (14):

மஹிந்திரா மராசோ (Mahindra Marazzo)

ஜீப் தார் LX (Jeep Thar LX)

ஈச்சர் வர்த்தக வாகனம் (Eicher Commercial Vehicle)

எர்டிகா VXI (Ertiga VXI)

ஜீப் தார் AX (Jeep Thar AX)

XUV 700

அர்பன் குரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder V Hybrid)

ஃபார்ச்சூனர் (Fortuner)

டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனம் (Tata Motor)

பிக்கப் 407 (Pickup 407)

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் வர்த்தக வாகனம்
(மற்றும் பிற வணிக/சரக்கு வாகனங்கள்)

கனிமொழியின் கணவர் பெயரில் உள்ள வாகனங்கள் (12):

கைனெடிக் இ-லூனா (Kinetic E-Luna X3)

எர்டிகா VXI (Ertiga VXI CNG)

ஜீப் தார் AX (Jeep Thar AX)

XUV 700

அர்பன் குரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder V Hybrid)

ஃபார்ச்சூனர் (Fortuner)

டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனம்

பிக்கப் 407 (Pickup 407)

மஹிந்திரா லிமிடெட் வர்த்தக வாகனம்

மஹிந்திரா ஜீட்டோ (Mahindra Jeeto X)

சட்டமன்றத்தில் எளிய எம்.எல்.ஏ-க்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு கார் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், த.வெ.க. உறுப்பினர்கள் குடும்பமாக 26 வாகனங்கள் வரை வைத்திருக்கும் அளவுக்கு வசதி படைத்தவர்களாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பல கோணங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

allowfullscreen