×

கொரோனா தடுப்பு நடவடிக்கை; சென்னை சிக்னலில் காத்திருப்பு நேரம் குறைப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனிடையே கொரோனாவால் போடப்பட்டிருந்த ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டதால் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த 5 ஆம் தேதி வரை சென்னை உட்பட 6 மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில், சென்னையில் சில தளர்வுகள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதனால், சென்னையில் வாகன போக்குவரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.
 

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனிடையே கொரோனாவால் போடப்பட்டிருந்த ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டதால் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த 5 ஆம் தேதி வரை சென்னை உட்பட 6 மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில், சென்னையில் சில தளர்வுகள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதனால், சென்னையில் வாகன போக்குவரத்தும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சென்னையில் முக்கிய இடங்களில் வாகன புழக்கம் அதிகமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி பல நடவடிக்கையை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை சிக்னலில் காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சிக்னலில் காத்திருக்கும் நேரம் அதிகமாக இருந்தால், கொரோனா பரவ வாய்ப்பு அதிகம் இருக்கும். அதனால் மக்களின் கூட்டம் சேர்வதை தடுக்க காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக, 10 முக்கிய இடங்களில் காத்தி6ருப்பு நேரம் 60 நொடியாக குறைக்கப்பட்டுள்ளது.