×

வரவு ரூ.100 எனில் செலவு ரூ.145 - சித்திக் ஐஏஎஸ்

 

மத்திய அரசு அனுமதித்த அளவில் தான் தமிழ்நாட்டின் கடன் உள்ளது என நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக் விளக்கம் அளித்துள்ளார்.

வெள்ளை அறிக்கை வெளியீட்டுக்கு பின் பின் செய்தியாளரிடம் பேசிய நிதித்துறை செயலர் சித்திக் ஐஏஎஸ், “தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஏற்கனவே உள்ள திட்டங்களை நிறைவேற்றவே கூடுதல் செலவாகிறது. நல்ல திட்டங்கள் நிறுத்தப்படாது. அரசுக்கு ரூ. 100 வருவாய் வந்தால் செலவு ரூ. 145 ஆகிறது. ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ரூ.45 பற்றாக்குறை. பற்றாக்குறையை சரி செய்ய வரவை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. மாநிலங்களின் கடனின் உச்சவரம்பை ஒன்றிய அரசுதான் நிர்ணயிக்கிறது. ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் மாநிலங்களால் எந்தக் கடனும் வாங்க முடியாது. அவர்கள் அனுமதித்த அளவில்தான் தமிழ்நாடு அரசின் கடன் அளவு இருக்கிறது. அதில் எந்த மாற்றமுமில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த போது நிதி நிலை மோசமாக இருந்தது. தற்போதும் தமிழ்நாட்டின் நிதி நிலை மிக மோசமாக தான் உள்ளது. தமிழ்நாட்டின் நிதி நிலை உடனடியாக சீராகும் என எதிர்பார்க்க முடியாது. ஏற்கனவே வாங்கி கடனுக்கு வட்டி கட்டி தான் ஆக வேண்டும்.. அதை ஒன்றும் செய்ய முடியாது.. அரசு ஊழியர்கள் ஊதியம், ஓய்வூதியத்தை தவிர்க்கவே முடியாது.. ரூ.100 வருவாய் என்றால் ரூ.64.4 தவிர்க்க முடியாத செலவு.. ரூ.45 பற்றாக்குறை உள்ளது” என்றார்.