×

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம் - என் மகனுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் - சித்தராமையா அதிரடி கோரிக்கை..!

 

கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா நேற்று முன்தினம் தன் பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகிய கையோடு டில்லிக்கு பறந்தார். புதிய முதல்வராக உள்ள சிவகுமாரும் டில்லி சென்றார்.

சோனியா, ராகுல், பிரியங்காவுடன் ஆலோசனை நடத்தினார்.பின், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை, சித்தராமையா சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, அவரது மகன் யதீந்திராவையும் அழைத்து சென்றார்.எந்தவித பிரச்னையும் செய்யாமல் பதவியை ராஜினாமா செய்த, சித்தராமையாவுக்கு, கார்கே நன்றி தெரிவித்தார். 

பதவி விலகியதற்கு கைமாறாக தன் மகன் யதீந்திராவுக்கு, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கார்கேயிடம், சித்தராமையா கோரிக்கை வைத்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுப்பதாக, கார்கேயும் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. யதீந்திராவுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கலாம் அல்லது செல்வாக்கு மிக்க துறையின் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.