×

பைக்கை ஓசியில் ரிப்பேர் செய்து தராததால் மெக்கானிக்கை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ.

 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் காவல்துறை சார்பு ஆய்வாளர் இருசக்கர வாகனத்தை இலவசமாக பழுது நீக்க கூறி ஒர்க்ஷாப் உரிமையாளரை மிரட்டி தாக்கிய காரில் ஏற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் சீனிவாசன் வயது(31). இவர் வாடிப்பட்டியில் ராயல் என்பீல்டு பைக் பழுதுபார்க்கும் நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு வாடிப்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த அண்ணாதுரை என்பவர் சீனிவாசன் வைத்திருக்கும் ஒர்க்ஷாப்பில் தனது ராயல் என்ஃபீல்டு பைக்கை பழுது பார்க்க கொடுப்பது வழக்கம். அதற்கான வேலை கூலி பொருட்கள் வாங்கும் பணத்தை தர மறுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து வாகனங்களை வேலைக்கு விடுவதும் அதற்கான பணம் ரூபாய்.8,600 கொடுக்காமல் இலவசமாக எடுத்துச் சென்றதாகவும்  கூறப்படுகிறது. 

மேலும் தற்போது சீனிவாசனை தாக்கி அண்ணாதுரை வாகனத்தில் ஏற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சீனிவாசன் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், முதல்வர் தனிப்பிரிவு மனித உரிமை கழக ஆணையம் என பல்வேறு துறைக்கு புகார் மனு அளித்து உதவி ஆய்வாளர் அண்ணா துரையின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை இலவசமாக பழுதி நீக்கித் தருமாறு கூறி ஒர்க்ஷாப் உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.