×

மாணவர்களுக்கு அரசியல் சார்பு கூடாதா? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

 

மாணவர்களுக்கு அரசியல் சார்பு கூடாதா?  என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுக்குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னை பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறை, சமூகவியல் முதுநிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் “மாணவர்கள் அரசியல் கட்சிகள் சார்ந்த எந்தவொரு அமைப்பு மற்றும் சங்கங்களில் உறுப்பினராக இருக்கக் கூடாது” எனவும், “அப்படி மாணவர்கள் ஈடுபட்டால் உடனே, கல்வி பெறும் வாய்ப்பில் இருந்து நீக்கலாம் என துறைத் தலைவருக்கு அதிகாரமளித்தும்” உள்ளது.

இது மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மதிக்காமல் செயல்பட்டுள்ள இச்சுற்றறிக்கையை வெளியிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும், சுற்றறிக்கையை திரும்பப் பெறவும் சென்னை பல்கலைக் கழக துணைவேந்தரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகின்றது.என்று குறிப்பிட்டுள்ளார்.