×

அரசு பொறுப்பில் இல்லாதவர் அங்கன்வாடியை திறப்பதா? வானூரில் நடந்தது என்ன? கொந்தளித்த வானதி சீனிவாசன்!

 

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;-

விழுப்புரம் மாவட்டம், வானூரில்  உள்ள புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை மக்கள் பிரதிநிதியோ, அல்லது எந்த ஒரு அரசுப் பொறுப்பிலும் இல்லாத ஒருவர் திறந்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

தவெக உறுப்பினர் என்ற அடையாளத்தினை மட்டும் வைத்துக் கொண்டு தொடர்ந்து இவர்கள் செய்யும் இந்த விதிமுறை மீறலுக்கு  அளவே இல்லை என்பது போல் தினமும் ஏதாவது ஒரு ரீல்ஸ் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டே இருப்பது தவெக அரசில் அரசு கட்டிடங்களும், அலுவலகங்களும் ஆளுங்கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ளதையே காட்டுகிறது.

ஆனால் இவர்கள் மீது தவெக தலைமையின்  நடவடிக்கையோ வெறும் கண்துடைப்பாகத் தான் உள்ளது. 

ஆளுங்கட்சியினரே அரசின் செயல்பாடுகளில் தலையிட்டால் பின்னர் எதற்கு மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் ?

இனியும் இது போன்ற விதிமீறல்கள் நடக்காவண்ணம் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளை ஆளுங்கட்சியினர் தலையீடு இல்லாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க 
முதல்வர் விஜய் தலைமை தனது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த வலியுறுத்துகிறேன்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே, அங்கன்வாடி கட்டடத்தை தவெகவினர் திறந்து வைத்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி சர்ச்சை... அரசு அதிகாரிகள் திறக்க வேண்டிய அரசு கட்டடத்தை தவெக உறுப்பினர் திறந்து வைத்தது குறித்து தவெக தலைமை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Viluppuram | Anganwadi Opening… pic.twitter.com/LqCg39zUEP

— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) July 20, 2026