×

ராமகோபாலனுக்கு மூச்சு திணறல் – மருத்துவமனையில் அனுமதி!

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்து முன்னணி தலைவரான ராமகோபாலனுக்கு வயது முதிர்வு காரணமாக திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இராமகோபாலனுக்கு மூச்சுத் திணறலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த அகஸ்ட் மாதம் இதேபோல, மூச்சு திணறலுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டட அவர் சிகிச்சை பெற்று வீடு
 

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்து முன்னணி தலைவரான ராமகோபாலனுக்கு வயது முதிர்வு காரணமாக திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இராமகோபாலனுக்கு மூச்சுத் திணறலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த அகஸ்ட் மாதம் இதேபோல, மூச்சு திணறலுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டட அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.