மூலப்பொருள்கள் வரத்து குறைவு- சிமெண்ட் விலை உயரும் அபாயம்!
மூலப்பொருள்கள் வரத்து குறைவு காரணமாக சிமெண்ட் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட், சிமெண்ட், இரும்புக் கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களிடையே கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் கட்டுமானப் பொருட்களின் விலை 40 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், ஒரு சாதாரண வீடு கட்டுவதற்கான செலவு பல லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மூலப்பொருள்கள் வரத்து குறைவு காரணமாக சிமெண்ட் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 2025-ல் ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டபோதும், சிமெண்ட் விலையில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது மூலதனப் பொருள்களின் விலை உயர்வால், சிமெண்ட் விலையை உயர்த்தும் கட்டாயத்தில் நிறுவனங்கள் உள்ளன. கச்சா எண்ணெய் விலையில் சாதகமான மாற்றம் ஏற்பட்டால், சிமெண்ட் துறையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அடுத்த சில ஆண்டுகளில் சிமெண்ட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதிர்பார்க்கப்படவில்லை என்றும் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.