காலையிலேயே வந்த ஷாக்கிங் நியூஸ்..!! தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,160 உயர்ந்தது..!!
பாதுகாப்பான முதலீடு மற்றும் சொத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது தங்கம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கத்தின் புழக்கம் அதிகம். மேலும், நமது பாரம்பரியம் மற்றும் கலாசார நிகழ்வுகளில் முக்கிய இடம் வகிக்கிறது. அதனாலேயே நமது மக்களிடையே தங்கம் விலை மாற்றம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு வரை தங்கம் விலை இனிமேல் ஏறுமுகத்தில் தான் இருக்கப்போகிறது. சாமானியர்களுக்கு தங்கம் என்பது வெறும் கனவு என்ற நிலை தான் இருந்தது. ஆனால் அதனை அமெரிக்கா - ஈரான் போர் மாற்றியமைத்தது. மடமடவென சரிந்த விலையால் வாடிக்கையாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்தாலும், தங்கத்தின் மீதான ஈடுபாடு குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, கடந்த ஆண்டில் கடும் விலையேற்றம் இருந்தபோது கூட தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டிவந்தவர்கள், இப்போது வாங்கலாமா அல்லது வேண்டாமா? என்ற குழப்பத்திலேயே இருப்பதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கத்தின் விலை இன்று (ஆக., 6) ஒரே நாளில் ரூ.2,160 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.13,480-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்து ரூ.107,840-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.270 உயர்ந்து, ரூ.13,750-க்கும், சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.250-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டு வருகிறது.