×

காலையிலேயே ஷாக்கிங் செய்தி..!!ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை..!!

 

தங்கம் என்பது நம் நாட்டில் ஒரு சாதாரண நகை மட்டும் இல்லை. அது பாதுகாப்பான முதலீடு.கடந்த சில வாரங்களாக தங்கம், வெள்ளி விலை ஸ்டெடியாகவே உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு சர்வதேச சந்தை, டாலர் விலை, எண்ணெய் விலை, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கிறது.

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து மக்களை கதி கலங்க வைத்து வருகிறது. இடையிடையே சற்று குறைந்தாலும் அவ்வப்போது புதிய உச்சம் தொட்டு, நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.

தங்கம் விலைb நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,770-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.94,160 ஆயிரத்துக்கும் செய்யப்பட்டது.

இன்று தங்கம் விலை கிராமுக்கு ₹140 உயர்ந்து ₹11,980-க்கும், சவரனுக்கு ₹1,120 உயர்ந்து ₹95,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் ₹95 ஆயிரத்தை கடந்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 192 ரூபாய்க்கும் கிலோவுக்கு 9 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.