ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! – டிசம்பர் 1 முதல் அதிரடியாக உயரும் கட்டணங்கள்!
ஆக்சிஸ் வங்கி தனது குறிப்பிட்ட சேமிப்புக் கணக்குகளுக்கான சேவைக் கட்டணங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்தப் புதிய விதிகள் 2026 டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகின்றன.
இலவச பணப் பரிவர்த்தனைகள் குறைப்பு: மாதத்திற்கான இலவச பணப் பரிவர்த்தனைகள் எண்ணிக்கை 4-ல் இருந்து 3 ஆக (அல்லது ரூ. 1 லட்சம் வரை) குறைக்கப்படுகின்றன.
குறைந்தபட்ச இருப்புத் தொகை (AMB) அபராதம் உயர்வு: குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத பட்சத்தில் வசூலிக்கப்படும் அதிகபட்ச மாதாந்திர அபராதம் semi-urban (அரை நகர்ப்புற) கிளைகளுக்கு ₹300-ல் இருந்து ₹600 ஆகவும், rural (கிராமப்புற) கிளைகளுக்கு ₹150-ல் இருந்து ₹600 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
செக் பவுன்ஸ் கட்டணம்: வெளிச்செல்லும் செக் (Outward cheque) திரும்பப்பெறப்படும் பட்சத்தில் (Cheque return) கட்டணம் ஒரு முறைக்கு ₹200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
EDGE ரிவார்ட்ஸ் புள்ளி நிறுத்தம்: குறிப்பிட்ட கணக்கு பிரிவுகளுக்கு வழங்கப்படும் ‘EDGE REWARD’ புள்ளித் திட்டம் நிறுத்தப்படுகிறது.
சம்பள கணக்குகள் (Salary Accounts): இந்த குறைந்தபட்ச இருப்புப் பற்றாக்குறை கட்டண விதிமுறைகளிலிருந்து சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் விலக்கு பெற்றுள்ளனர்.