நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..! டியூஷன் முடிந்து சைக்கிளில் திரும்பிய 8 வயது சிறுவன் மீது பாய்ந்த அதிவேக பைக்..!
மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூர் மாவட்டம் பத்ராவதி நகரில் உள்ள நாகசென் நகர் பகுதியில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மிதிவண்டியில் சென்ற 8 வயது சிறுவன் மீது பயங்கரமாக மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர விபத்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பத்ராவதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன், வழக்கம்போல் தனது டியூஷன் வகுப்பை முடித்துக் கொண்டு மிதிவண்டியில் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தான். நாகசென் நகர் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, எதிரே 17 வயது சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து மிதிவண்டி மீது அதிவேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன், நல்வாய்ப்பாகப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினான்.
விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், விபத்தை நேரில் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். அலட்சியமாகவும் அதிவேகமாகவும் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனை பொதுமக்கள் உடனடியாகச் மடக்கிப் பிடித்து சிறைபிடித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து பத்ராவதி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பத்ராவதி காவல்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று பாயிண்டில் இருந்த 17 வயது சிறுவனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், காயமடைந்த 8 வயது சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடியிருப்பு மற்றும் பள்ளிப் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் உரிமம் இல்லாத மைனர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதைத் தடுக்கக் காவல் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Chandrapur - An eight-year-old boy riding a bicycle was struck by a speeding motorcycle in the Nagasen Nagar area of Bhadravati city in Chandrapur district. The collision was captured on CCTV footage, which shows the impact. The child survived the accident. Boy was returning home after his coaching class and crossing the road when a 17-year-old minor on a motorcycle hit him due to alleged rash driving. Local residents who witnessed the incident detained the minor rider and handed him over to the police. Bhadravati police reached the spot promptly and shifted the injured child to a hospital for treatment.
— NextMinute News (@nextminutenews7) November 4, 2026