×

மதுரை மக்களுக்கு பேரதிர்ச்சி! உலக வெப்ப அபாயப் பட்டியலில் 7-வது இடத்தில் மதுரை! அப்போ சென்னை..?

 

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.அதுவும் மதுரை மக்களுக்கு இந்த ஆய்வு செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என கூறலாம்.

'சஸ்டெயினபிள் சிட்டிஸ் அண்ட் சொசைட்டி' என்கிற பெயரில்.. உலக அளவில் தீவிர வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு மெற்கொண்டிருந்தது. இந்த ஆய்வில் அதிகபட்ச வெப்பநிலையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், ஒரு நகரத்தின் மக்கள் தொகை, குழந்தைகள், முதியவர்கள், ஏழைகளின் எண்ணிக்கை.. தீவிர வெப்ப அலை வீசும்போது அதிலிருந்து தப்பிக்க தேவையான ஏசி ரூம்கள், நகரத்தில் எவ்வளவு மரங்கள் இருக்கின்றன என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 


இதில்தான் மதுரை 7வது இடத்தில் இருக்கிறது. இதற்கு முதல் காரணம், நகரில் மரங்களின் பரப்பளவு மிக குறைவாக இருப்பதே! அதேபோல திட்டமிடப்படாத நகர்ப்புற கட்டமைப்பு, அதிக அளவி கான்கிரீட் கட்டிடங்கள் போன்றவை நகரத்தின் வெப்பத்தை அதிகரிக்திருக்கின்றன. மட்டுமல்லாது இங்கு திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வெப்ப அலை வீசும்போது அவர்கள் தஞ்சமடைய ஏசி பாதுகாப்ப வசதிகள் இல்லை என்பதும் மதுரைக்கான பின்னடைவாகும்.

இந்த லிஸ்ட்டில் அகமதாபாத் 2வது இடத்திலும், நாக்பூர் 4வது, மதுரை 7வது, சென்னை 49வது இடங்களில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.