வாகன ஓட்டிகள் ஷாக்..!ஒரே நாளில் எகிறிய பிரீமியம் பெட்ரோலின் விலை..!
Updated: Apr 1, 2026, 14:04 IST
டெல்லியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் XP100 பெட்ரோல் (பிரீமியம் வகை) மற்றும் எக்ஸ்ட்ரா கிரீன் (பிரீமியம் டீசல்) ஆகியவற்றின் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.
XP100-இன் விலை ஒரு லிட்டருக்கு ரூ.149-லிருந்து ரூ.160-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியன்ஆயிலின் XP100 என்பது, மேம்பட்ட இன்ஜின் செயல்திறனுக்காக உயர் ரக சொகுசு கார்கள் மற்றும் சூப்பர்பைக்குகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் 100-ஆக்டேன் பிரீமியம் பெட்ரோல் ஆகும். இதேபோல், எக்ஸ்ட்ரா கிரீன் (பிரீமியம் டீசல்) அதன் முந்தைய விலையான ரூ.91.49-க்கு பதிலாக, இனி ரூ.92.99-க்கு விற்கப்படும்.
பிரீமியம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்குப் பின்னால் உள்ள காரணத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் இன்னும் குறிப்பிடவில்லை