×

சென்னையில் அதிர்ச்சி..! ராட்சத சிமெண்ட் பாறை விழுந்து இளைஞர் பலி!

 

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் செம்மொழி பிரதான சாலையில் மெட்ரோ தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஜார்க்கண்ட் மாநில இளைஞர்கள் தூண்களை மேலே தூக்கி வைக்கும் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ராட்சத சிமெண்ட் தூண் மீது இரண்டு இளைஞர்கள் அமர்ந்து செல்லும்போது, தூண் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

இதில் பிக்கி குமார் என்ற 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சந்தோஷ் லக்காரா என்ற இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார், இறந்த இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.