வாக்களிக்க வந்த இளைஞருக்கு அதிர்ச்சி
ஈரோடு குமலன் குட்டை பகுதியை சேர்ந்த இளைஞரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு குமலன் குட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் தினேஷ். இன்று காலை தனது வாக்கை செலுத்துவதற்காக பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன், அருகில் உள்ள அரசு பள்ளி வாக்கு சாவடிக்கு சென்றுள்ளார். வரிசையில் நின்று வாக்களிக்க உள்ளே சென்ற போது, அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் பரிசோதித்த வாக்குச்சாவடி அலுவலர், அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டதாக கூறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனது வாக்கை யாரோ கள்ளத்தனமாக பதிவு செய்து விட்டதாக குற்றம் சாட்டினார். சிசி டிவி காட்சிகளை வைத்து அதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், தனக்கு வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அவரை சமாதானப்படுத்திய போலீசார், இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.்இதன் பின் தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தல் படி, தேர்தல் நடத்தை விதிகள் 1961 பிரிவு 46.p.ன் கீழ் Tendered vote, (ஆய்வுக்குரிய வாக்கு) பதிவு செய்ய அனுமதி வழங்கினர்.