"தோசைதான் விஜய்யோட ஃபேவரைட்... விஜய்க்கு மிக நெருக்கமானவர் இவர் தான்"- ஷோபா சந்திரசேகர்
பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் பேப்பர் பார்க்காமல் உறுதிமொழி எடுத்தது ஆச்சரியமாக இருந்தது என அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், "விஜய்க்கு Non-Veg ரொம்பப் பிடிக்கும். மட்டன், பிரான் எல்லாம் நல்லா சாப்பிடுவாரு. தோசைதான் அவரோட ஃபேவரைட். இப்பவும் அவர் வீட்டுக்குப் போனா, ‘என்ன தோசை வேணும்?னு கேட்டு வெரைட்டியா ஊத்திக் கொடுப்பாரு. பதவியேற்பு விழாவில் விஜய் பேப்பர் பார்க்காமல் உறுதிமொழி எடுத்ததுதான் ஆச்சர்யமாக இருந்தது. அவர் அவ்வளவாக எதையும் பார்த்துப் படிக்க மாட்டார். காட்சிகளில் வசனங்களை உள்வாங்கி, புரிந்துகொள்ளும் பழக்கம் அவருக்கு உண்டு. விஜய் பதவியேற்கும்போது என்னுடைய கணவரின் முகத்தைத்தான் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
‘நாளைய தீர்ப்பு' படத்தில் முதல் நாளில் ராதா ரவி சாருடன் ஒரு கடினமான காட்சியை எஸ்.ஏ.சி கொடுத்தார். ஆனால், விஜய் ஒரே டேக்கில் ஓ.கே செய்துவிட்டார். எஸ்.ஏ.சி வீட்டுக்கு வந்து ‘அவன்கிட்ட ஒரு ஸ்பார்க் இருக்கு'ன்னு சொன்னாரு. அவரு அவ்வளவு ஈஸியா எதையும் பாராட்ட மாட்டார். விஜய் எனக்கு எப்போதுமே ‘ஜோ'தான். நான் அவரை அப்படித்தான் அழைப்பேன். விஜய்க்கு சஞ்சீவ், ஸ்ரீநாத், ராம்குமார் என நான்கைந்து நண்பர்கள் இருக்கிறார்கள். இதில் விஜய்க்கு மிக நெருக்கமானவர் ஸ்ரீநாத்தான்"என்றார்