×

SheToilet எனும் முன்னெடுப்பைத் தூய்மையாகப் பராமரிப்பது நம் அனைவரது பொறுப்பு!! 
 


 

 

SheToilet எனும் இந்தப் பாராட்டத்தக்க முன்னெடுப்பைத் தூய்மையாகப் பராமரிப்பது நம் அனைவரது பொறுப்பு எனறு முதல்வர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் பெண்களுக்காக நடமாடும் ஒப்பனை அறை  வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கழிவறை, முகம் பார்க்கும் கண்ணாடி, சானிடரி நாப்கின், கை கழுவும் திரவம், உடைமாற்றும் சிறு அறை ,தாய்ப்பால் ஊட்டும் உள்ளன.  பெண்கள் சாலையில் பாத்ரூம் போவதற்காக சிரமப்படுவதை ஒட்டி இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்துக்கு தலா ஒரு வாகனம் என மொத்தம் 15 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.